கருத்தரிப்பு மையம்

ஐசிஎஸ்ஐ (ICSI)
இது அதிக அளவில் விந்தணு குறைபாடு உள்ள தம்பதியருக்கவே பரிந்துரைக்கப்படும் சிகிச்சை ஆகும் .இது ஐ. விஃப் சிகிச்சையோடு சேர்ந்து செய்யப்படும் ஒரு முறையாகும், சதக்தக்களுக்கக் ஒரு விந்தணுவை நேரடியாக கருமுட்டையில் ஊசியின் மூலம் செலுத்துவதாகும். எங்களுடைய அனுபவம் இங்கு கை கொடுக்கும்.
முன்பதிவு செய்யுங்கள்
ஐஎம்எஸ்ஐ (IMSI)
இது துணை கரு உருவாக்க மருத்துவத்தில் பலன் தரும் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் உபயோகப்படுத்தும்.விந்தணுவானது நுண்ணோக்கியின் மூலம் 7200 மடங்கு பெரிதாக்கப்பட்டு தேர்தெடுக்கப்படுவதால், அதிக அளவு பலன்கள் இருக்கும். இதில் கருச்சிதைவு சதவீதம் மிக மிகக் குறைவு இது ஐ வி ப் / ஐ சி எஸ் ஐ தோல்வி ஏற்பட்டால் இதனை தேர்தெடுக்க அறிவறுத்தப்படுகிறது.


கருவாக்குதல்
எங்கள் ஆய்வகத்தில் நேர்த்தி செய்யப்பட்ட விந்தணுவையும் சேகரித்த முட்டையினையும் இணைத்து அதற்கான குடுவையில் வைப்பார்கள். அடுத்தநாள் அது கருவாக உருவானதை பரிசோதித்து அவற்றை அதற்கான திரவத்தில் இட்டு இன்குபேட்டரில் பாதுகாப்பார்கள்.
பிளாஸ்டோசிஸ்ட்
வளர்ச்சியடைந்த 3 ம் நாள் அல்லது 5 ம் நாள் கருவை கருப்பையினுள் செலுத்தவார்கள். சிலவற்றை தம்பதிகளின் விருப்பத்திற்கேற்றவாறு உறைநிலையில் சேமிப்பார்கள்.5 ம் நாள் கரு கூட்டமாக நன்கு வளர்ந்த செல்களாகத் தோன்றும். இதனை பிளாஸ்டோசிஸ்ட் என்று சொல்வோம்.


கரு கர்ப்பப்பையில் செலுத்துதல்
- இது 3 ம் அல்லது 5ம் நாள் செலுத்தப்படும். கர்ப்பப்பையில் கருவை செலுத்துவது மிக எளிய சிகிச்சை முறையாகும். சுத்திகரிக்கப்பட்ட தனியறையில் செய்யப்படும். பெண்ணிற்கு மயக்கமருந்து தேவைப்படாது.
- பெண்ணுறுப்பு வழியாக கருப்பையில் கரு வைக்கப்படும். ஸ்கேன் மூலம் இது உறுதி செய்யப்படும். இது மிகவும் எளிய சுலபமான சிகிச்சை முறையாகும். மிக குறைந்த நேரமே இதற்காக தேவைப்படும்.
- கருவை கர்ப்பபையினுள் செலுத்தி முடிந்தவுடன் 15 நாட்கள் கழித்து B.HCG பரிசோதிக்கப்பட்டு கரு வளர்ந்ததை உறுதி செய்யப்படும்.
- இது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் 28 ம் நாளில் அறிந்து கொள்ளப்படும்.
- இதன் பின் 15 நாட்கள் கழித்து ஸ்கேன் பரிசோதனை மூலம் கரு கர்ப்பபையினுள் வளர்வதை உறுதி செய்யப்படும்.
ஐவிஎப் (IVF)
சரியான சிகிச்சை மையத்தை தேர்ந்தெடுங்கள் மருத்துவர்களிடம் உங்கள் சிகிச்சை குறித்து உரையாடுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். அவர்களோடு நீங்கள் மனம் விட்டு பேச வேண்டியது அவசியம். தீபம் மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு நம்பிக்கையூட்டி, உங்களை மனதளவிலும், உடலளவிலும் தயார் செய்வார்கள்.


ஐயுஐ (IUI)
இது ஒரு வகை செயற்கை கருவூட்டல், கருவுறாமைக்கான சிகிச்சையில் செயல்முறை ஆகும். உறிஞ்சப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட விந்தணு உங்கள் கருப்பையில் நேரடியாக உங்கள் கருவகம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகள் வெளிப்படும் போது நிகழ்த்தப்படும். பழைய வகை செயற்கை கருவூட்டல் விந்தையில் விந்தையை வைத்துள்ளது. இது எளிதானது என்றாலும், தற்போதைய செயல்முறையாக அது வெற்றிகரமாக இல்லை.
Health Insurance Support









கருத்தரிப்பு மையம் சிற்றேடு