Home / ஆண்கள் சிறப்பு சிகிச்சை

விறைப்பு தன்மை குறைபாடு

இதற்கான காரணங்கள் பல உண்டு. வயதாகுதல், உடல் தளர்ச்சி, மற்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு மேற்புற காயம், மன அழுத்தம். குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்றவை. நீங்கள் இதற்கு முதலில் எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகி இது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

இதற்கான சில பிரத்யோக பரிசோதனைகள் உண்டு. முதலில் உங்களுடைய மருத்துவ மற்றும் பாலுறவு பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்ள மருத்துவர் உங்களிடம் கேள்விகள் கேட்பார். அதன் மூலமே இது உங்களுக்கு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயல்வார். உங்களது உறுப்பினை பரிசோதித்து அதன் இயல்பு தன்மை பற்றி அறிந்து கொள்வார். உங்கள் நாடி துடிப்பு, இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை பரிசோதித்து அறிந்துகொள்வார். பிறகு இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனையும் நடக்கும். இதன் மூலம் இதன் ஆரம்பம் தெளிவாய் அறிந்து கொள்ளப்படும். அதன் முடிவுகளை பொறுத்தே உங்களுக்கு சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு

சர்க்கரை நோய் விறைப்பு தன்மை குறைபாடு ஏற்பட முக்கியமானதொரு காரணமாகும். இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் தாம்பத்திய வாழ்வில் போதுமான ஈடுபாட்டினை இழக்க நேரிடலாம், சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்பு கோளாறோ, விந்து குழாய் குறைபாடோ, அணுறுப்பிற்கு இரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களில் குறைபாடோ மன அழுத்தமோ அதன் மூலம் பாலியல் ஹார்மோன்கள் சரியாக சுரக்காததோ இந்த குறைபாட்டினை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்காலம். நோயாளியின் சமூக நிலைப்பாடு, பொருளாதார நிலைமை ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்கள் சிறப்பு மருத்துவர்களுடன் இந்த குறை பாட்டினை பகிர்ந்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைப்பது எப்படி என்பது பற்றி அவர்கள் ஆலோசனை சொல்வார்கள். உங்களின் மற்ற குறைபாடுகளையும் பகிர்ந்து கொண்டு ஆலோசனையும் தகுந்த மருத்துவ சிகிச்சையும் பெற்றிடுங்கள்.

எங்கள் மருத்துவர்களின் சிறப்பு சிகிச்சை உங்கள் வாழ்வினில் மீண்டும் வசந்தத்தை வரவழைக்கும் விந்து முந்துதல் (அ) விந்து சீக்கிரம் வெளியேறுதல். உடலுறவில் மிகச்சீக்கிரமாகவே விந்து வெளிவருதல் தம்பதிகள் இருவருக்கும் மனவருத்தத்தையும், இல்வாழ்க்கையில் விரைவிலேயே வெறுப்பையும் ஏற்படுத்தலாம். உடலுறவு ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே முடிந்து விடுவது மிகவும் பிரச்சினையான ஒன்று. ஆண்களில் 30% - 40% பேர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

எங்கள் சிறப்பு மருத்துவர்கள் உங்களுக்கான தீர்வினை அளிப்பார்கள்.

முதலில் எங்கள் சிறப்பு மருத்துவர்களை அணுகி, உங்கள் பிரச்சினையினை விளக்கமாக சொல்லுங்கள். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சோர்வு, குற்றவுணர்வு, செயல்பாடு குறித்த 'சந்தேக மனநிலை மேலும் விறைப்பு தன்மை குறைபாட்டினால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம்.

Percutaneous epididymal sperm aspiration (PESA)‌

இது ஊசி மற்றும் சிரிஞ் மூலம் செய்யப்படும் ஒரு பரிசோதனை ஆகும். இதில் ஊசி நேரடியாக விந்து குழாயிலேயே செலுத்தப்படும். ஒரு மிக மெலிதான ஊசி செருகப்பட்டு விந்து எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் ICSI சிகிச்சையில் ஊசியில் செலுத்தவும் இதே முறையில் விந்து எடுக்கப்படும். விந்து வெளியேறுதல் குறைபாடுள்ள நபரிடமிருந்து சுலபமாக விந்து எடுக்க இதுவே சிறந்த முறை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது நுண் அறுவை சிகிச்சை மூலம் விந்து சேகரித்தலை விட இது சுலபமான முறையாகும்.

TESA

TESA விதை பையிலிருந்து விந்து சேகரித்தல். ஒரு சிரிஞ்சில் ஊசியை பொருத்தி அதை விதை யையின் வழியாக உட்செலுத்தி, விதைகளிலிருந்து திரவத்தை உறிஞ்சுதல். TESA சிகிச்சை விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற சிகிச்சை ஆகும். இவர்களுக்கு விந்து குழாயில் விந்தணு இருக்காது, இது நேராக விதைகளிலிருந்து விந்துவை எடுக்கும் வழிமுறை ஆகும். விதைபையில் எப்போதும் விந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நோயாளி மயக்க மருந்து செலுத்தப்பட்டு மையத்தில் இருக்கும் போது அவருடைய விதை பையிலிருந்து திரவம் சேகரிக்கப்படும் அது பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு மேலும் பரிசோதனைகள் செய்யப்படும்.

Health Insurance Support

 ஆண்கள் சிறப்பு சிகிச்சை சிற்றேடு